பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பை சார்ந்த 500க்கும் மேற்பட்டவர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 30.08.2018 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிறுவர் பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராமர், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட செயலர் அருள் ஜோதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தரக்குறைவாக சமீபத்தில் பேசியதை கண்டித்து கண்டன முழக்களை எழுப்பினர். மேலும் பலர் கண்டன உரையாற்றினர்.