மனைவிக்காக பிரச்சாரம் செய்த அரசு ஊழியர் சஸ்பென்ட்...!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நீப்பத்துறை. இந்த கிராமத்தின் வருவாய்த்துறை கிராம உதவியாளராக இருப்பவர் சங்கர். இவரது மனைவி சாந்தி. இவர் நீப்பத்துறை கிராமத்தில் உள்ள ஒரு வார்டில் வார்டு உறுப்பினராக போட்டியிடுகிறார்.

Government employee suspended for campaigning for wife

தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சங்கர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதற்கு அக்கிராமத்தை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நான் அப்படித்தான் செய்வன், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என முருகன் சொல்லியுள்ளார். அதோடு, இவருக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி வனரோஜா இருக்கார் எனக்கூறப்படுகிறது.

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர்க்கு புகார் தெரிவித்துள்ளனர் அப்பகுதி கட்சியினர்களும், வேட்பாளர்களும். இதனை தொடர்ந்து சங்கரை அரசுப்பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி.

election campaign goverment officers local body election
இதையும் படியுங்கள்
Subscribe