ADVERTISEMENT

"விவசாயிகள் மீது அரசுக்கு அக்கறையில்லை"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

06:48 PM Aug 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் இன்று (08/08/2022) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. கடலில் கலக்கும் நீரை உரிய முறையில் சேமிக்காமல் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க அரசு தவறிவிட்டது.

தி.மு.க. அரசு நிர்வாகத் திறனற்ற அரசாக செயல்படுகிறது. மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து, பேருந்து கட்டணத்தையும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தவே ஆன்லைன் ரம்மி குறித்து தி.மு.க. அரசு கருத்து கேட்கிறது. மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT