Advertisment

'ஏழைகளையும் விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு வீழ்ந்தே தீரும்' - கமல் பேச்சு!

 'Government that does not protect the poor and farmers will fall ...' - Kamal speech!

Advertisment

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரசியல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி, செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்த வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், "வரவிருக்கும் அரசியல், பழி போடும் அரசியல் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல வழிகாட்டும் அரசியல். விவசாயிகளை, நெசவாளர்களை, ஏழைகளைப் பாதுகாக்காத அரசு வீழ்ந்தே தீரும். அதை வீழ்த்தப்போவது நீங்கள். வீழ்த்தும் கருவியாக எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்திற்காக நீங்கள் காத்திருப்பது போல நாங்களும் காத்திருக்கிறோம். முதலில் நாங்கள் இருப்பதாகவே அங்கீகரிக்கவில்லை. பிறகு கொக்கரித்துச் சிரித்தார்கள். பின்பு எங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். இன்னும் பாக்கி இருப்பது, அவர்கள் தோற்கவேண்டியதுதான். அது உங்கள் விரல்களில்தான் உள்ளது. நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். மக்கள் நீதி மய்யம் வெளியிடும் திட்டங்கள் உங்களுக்கான திட்டங்கள். நாங்கள் கொடுப்பது வெற்று வாக்குறுதிகள் அல்ல"என்றார்.

Pudukottai kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe