
புதுக்கோட்டையில் விபத்தில் காயமடைந்தவரின் கணுக்காலில் இருந்த ஜல்லி கற்களை அகற்றாமல் அரசு மருத்துவர்கள் அலட்சியமாக தையல் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த மதிவாணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதியுள்ளார். இதில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் மீது விழுந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட மதிவாணன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு தையல் போடப்பட்டது. இருப்பினும் வலி அதிகமானதால் தனியார் மருத்துவமனையை மதிவாணன் நாடியுள்ளார். அப்பொழுது அங்குஸ்கேன் செய்து பார்த்ததில் தையல் போட்ட இடத்திற்குள் சிறிய ஜல்லி கற்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தையல் பிரிக்கப்பட்டு உள்ளே இருந்த ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது.
Follow Us