Skip to main content

"காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

"The government did not act with care" - Chief Minister MK Stalin's explanation!


தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (26/08/2021) பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்து பேசினார். 

 

அப்போது, பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

 

இதற்கு விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட நினைத்திருந்தால் 'அம்மா உணவகம்' அதே பெயரில் தொடர்ந்திருக்காது" என்றார்.

 

இருப்பினும் முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்காத தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுகிறது" என்று குற்றஞ்சாட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்