கரூர் மாவட்டம் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டு போராட்ட குழு சார்பாக இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் 01.01.2022 முதல் வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி சி.பி.எஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும், முடக்கப்பட்ட சரண்டர் பணப்பலன்களை திரும்ப வழங்கிட வேண்டும், உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் மாவட்ட அமைப்பாளர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட இணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட இணை அமைப்பாளர் ஞானசேகரன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.