சேலம் மாவட்டம் ஆத்தூர் (வ) அருகே உள்ள துலுக்கனூர் பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 110 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியானது பழங்காலத்தில் ஏரியாக இருந்துள்ளது. இருப்பினும் அந்த ஏரியானது ஆழம் இல்லாமல் மற்றும் வறண்ட பகுதியாக காணப்படுகிறது. இதனால் இந்த இடத்தில் மக்கள் குடியேறி உள்ளனர். ஆனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்த தமிழக அரசு "மின் இணைப்புக்கு" மட்டும் அனுமதி தரவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சாலை வசதி , தண்ணீர் வசதி , மின் இணைப்பு மற்றும் வீட்டு வரி ஆகியவை 2009 வரை கட்டி உள்ளனர்.அரசு அதிகாரிகள் இவ்விடம் ஏரி ஆக்கிரப்பை என்பதால் மின் இணைப்பு துண்டித்தனர். இது தொடர்பாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சென்ற மக்கள் அங்கு உதவி பொறியாளர் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்த விவகாரம் தொடர்பாக விளக்களித்த மின் வாரிய பொறியாளர் நீங்கள் வசிக்கும் இடம் ஏரி ஆக்கரிப்பு இடம் எனவே இந்த பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளனர். இந்த கடிதம் தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. ஆனால் இது வரை மக்களுக்கு வீடுகளை அரசு ஒதுக்கவில்லை. மேலும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சின்னதம்பி அவர்கள் உள்ளார். இவரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓட்டுக்கு மட்டுமே எங்களை தேடி வருகின்றனர் அரசியல் கட்சிகள் . இது குறித்து இப்பகுதி மக்கள் நமக்கு அளித்துள்ள பேட்டியில் மின்சாரம் இல்லாததால் பள்ளி குழுந்தைகள் இரவு நேரத்தில் படிக்க இயலவில்லை மற்றும் இரவு நேரத்தில் பாம்புகள் மற்றும் தேள்கள் உலா வருவதாகவும் , இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு நாளும் அச்சத்திலேயே உறங்குகின்றனர். மேலும் எங்கள் வீடுகளில் மின்சாரம் இல்லாததால் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை மற்றும் கனவுகள் சிதைவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த பகுதிக்கு மிக அருகில் உள்ள கோவில்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வசதி வழங்கவில்லை. மேலும் மின்கம்பங்கள் இப்பகுதியில் உள்ளனர். ஒன்று எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் . இல்லையெனில் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு பட்டா வழங்க வேண்டும். அப்போது தான் எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். எனவே தமிழக அரசு மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரத்தை ஆத்தூர் பகுதியை சேர்ந்த "கவிகை அறக்கட்டளை" என்ற இளைஞர்களை கொண்ட தனியார் தொண்டு அமைப்பு கையில் எடுத்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பி . சந்தோஷ் , சேலம்