அரியலூர் சடையப்பர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்.அரியலூர் அரசு சிமெண்ட் புதிய ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பணியின்போது மின்சாரம் தாக்கியதில் கீழே கிடந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.