Advertisment

'மாண்டஸ்' எதிரொலி - 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது

Government buses will not run tonight in 6 districts

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மணிநேரத்தில் தீவிர புயலாக இருக்கும் மாண்டஸ், புயலாக வலுவிழந்து நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe