Advertisment

திருச்சி - அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் விபத்து

Government buses crash

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே சேலம் நெடுஞ்சாலையில் உத்தமர்கோவில் மேம்பாலம் நடுவில் இரு அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில்பயணிகள் காயமடைந்தனர்.

Advertisment

TN 45 N 5927 என்ற அரசு விரைவு பேருந்து சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும்போது, பேருந்தின் ஓட்டுநர் தனக்கு முன்னால் சென்ற காரினை முந்திசெல்ல முயற்சித்துள்ளார். அப்போது எதிரே சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நெய்வேலி (முசிறி அருகே உள்ளது) நோக்கி சென்ற TN 45 N 3415 என்ற அரசு பேருந்து மீது படுவேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது.

Advertisment

இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.பயணி ஒருவர் வலது கால் உடைந்தும், பெண் பயணிகள் மற்றும் பலசக பயணிகளுக்கும் கடுமையான இரத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு டோல்கேட் காவல்துறையினர் வந்து போக்குவரத்தை சீர்செய்து, விசாரணையில் ஈடுபட்டனர்.

crash bus government
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe