Advertisment

மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளை!

government bus windows broken drunker incident

Advertisment

சென்னை அரசு பேருந்தின் கண்ணாடிகளை மதுபோதையில் இருந்த நபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் கடந்த 2ஆம் தேதி சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக வந்தமாணவர்களை நடிகை ரஞ்சனா, பேருந்திலிருந்துவலுக்கட்டாயமாகக் கீழே இறக்கிவிட்டு அவர்களைத் தாக்கினார். மேலும், படிக்கட்டில் பயணித்த மாணவர்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி பேருந்தின் நடத்துநரைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே நாளில் மதுபோதையில் இருந்த ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பேரம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பூந்தமல்லி நிறுத்தத்தில் வந்த பின்பு பயணிகளை இறக்குவதற்காக பேருந்தின் ஓட்டுநர் அந்த பேருந்தை நிறுத்தினார். அப்போது அந்த நிறுத்தத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த பேருந்தின் கண்ணாடிகளை கட்டைகளை வைத்து சுற்றி சுற்றி வந்து உடைத்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த பயணிகள் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.

Advertisment

மேலும், பதட்டமடைந்த பயணிகள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று (05-11-23) கைது செய்துள்ளனர். மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த நபர் குருநாதன் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe