
மது போதையில் நடுத்தர வயது பெண் ஒருவர் சாலையில் வாகனங்களை மறித்து ரகளை செய்யும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோவையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் குறித்த அந்த வீடியோ காட்சியில், மது போதையில் சாலையில் நின்று கொண்டிருக்கும் பெண் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை வீடியோ எடுக்க, அதனைப் பார்த்த அந்த பெண் 'வீடியோ எடுங்கள் எனக்கு என்ன பயமா'' எனக் கூறியதோடு சாலையில் வந்த ஆம்னி வேன் ஒன்றை நிறுத்தி அதனுடைய சாவியை எடுத்துக் கொண்டார். இதனால் ஆம்னி வேன் ஓட்டுநர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த 16 என்ற எண் கொண்ட திருப்பூர்-காங்கேயம் இடையிலான பேருந்தை வழிமறித்த அந்த பெண் பேருந்தின் முன்புறம் நின்றுகொண்டு நகர மறுத்தார். இதனால் சற்று நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியவர்களை திட்டிய அந்த பெண் அங்கிருந்து நகர மறுத்து ரகளை செய்த அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us