Skip to main content

ஊரடங்குகிற்குப் பிறகு ஓடிய அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு! முதல் நாளில் நடந்த சம்பவம்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

bus


கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ள நிலையில் கரோனா தாக்கம் குறைவாக உள்ள மண்டங்களில் பேருந்து போக்குவரத்து இன்று முதல் தொடங்கியுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கினாலும் மக்கள் அதிகம் பேருந்துகளில் ஏறி பயணிக்கவில்லை.
 


இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று பழைய பேருந்து நிலையம் அருகே வந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாகப் பறந்து வந்த கல் ஒன்று பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகளை உடைத்தது. அவசரமாகப் பேருந்தை நிறுத்தி கல் வீசியவரைப் பார்த்தபோது தான் தெரிந்தது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பது. 
 

ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலைகளில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்த பெண் தற்போது பேருந்தைப் பார்த்ததும் இப்படிக் கல்வீசி தாக்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

People travel with umbrellas inside the bus!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது. 

 

இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

Next Story

அரசுப் பேருந்து நடத்துநர் மோசடி! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Government bus conductor fraud!

 

கடலூர் மாவட்டம், வடலூர், ஊமங்கலம் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மழவேந்தி, உத்திராபதி ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஏறினார்கள். அப்போது அவர்கள் பயணிகளின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்து சீரியல் எண் சரி பார்த்தபோது அந்த டிக்கெட் பழைய டிக்கெட் எனத் தெரியவந்தது.

 

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் டிக்கெட்டை பரிசோதித்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகளிடம் இருந்த டிக்கெட் ஏற்கனவே பயணம் செய்தவர்களின் டிக்கெட் என்றும் இது பழைய டிக்கெட் என உறுதியானது. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார். அதன் காரணமாக அவரது பணப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த டிக்கெட் பழைய டிக்கெட் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சத்தியமூர்த்தி மற்றும் நடத்துநர் நேரு ஆகிய இருவரையும் சேலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.

 

இவர்கள் நடத்திய விசாரணையில், நடத்துநர் பழைய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடியில் ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.