சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து விபத்தில் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் புகுந்த சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தூர் கிராமத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லாரி மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கியது. தொடர்ந்து சாலையை ஒட்டி இருந்த புதர் பகுதிக்குள் நுழைந்த அரசு பேருந்து அதனையொட்டி கட்டப்பட்டிருந்த வீடு ஒன்றின் மீது மோதி நின்றது.அரசு பேருந்து ஓட்டுநர் கவனக் குறைவாக பேருந்தைஇயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில்யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.