government bus employees tn govt

Advertisment

ஊதிய உயர்வு, பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25/02/2021) முதல் அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று (24/02/2021) மாலை 04.00 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர்.

அதேபோல், போக்குவரத்துதொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், அரசு பேருந்து போக்குவரத்துதொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.