சேலத்தில் இருந்து சுமார் 25 வயதுமதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், நேற்று இரவு ஈரோட்டிற்கு சொந்த வேலை காரணமாக அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஈரோடு பேருந்து நிலையம் வந்ததும், பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இளம்பெண் பயணம் செய்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் ஓட்டுநர், ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த பிரபாகரன்(51) என்பவர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். தொடர்ந்து அந்தப் பெண் ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரபாகரனை போலீஸார் கைது செய்தனர்.