Advertisment

பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

Government bus driver suspended for insulting female passenger

பெண் பயணியிடம் தரக்குறைவாகப்பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி என்ற பகுதியில் பெண் பயணி ஒருவர் கைக்குழந்தையுடன் கூடலூர் செல்வதற்காகப் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அப்பெண்மனி, பேருந்தை நிறுத்த கைகாட்டியபோது ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்தில் ஏறிப்பயணித்து பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பன்னீர் என்பவரிடம், ‘பேருந்தை ஏன் நிறுத்தவில்லை’ என அப்பெண்மணி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர், அந்தப் பெண்மணியை தரக்குறைவாகத்திட்டியதாகப் புகார் எழுந்தது. மேலும் பெண்ணை தரக்குறைவாக ஓட்டுநர் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் பெண் பயணியிடம் தரக்குறைவாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பன்னீரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Transport tnstc nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe