அரசு பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து நடத்துநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவரிடம் பேருந்தின் நடத்துனர் பாலியல் தொல்லையில்ஈடுபட்டதாக தெரியவர இதுதொடர்பாக அந்த மாணவி கானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரவில் விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி நடத்துநர் பாலியல் தொல்லை தந்துள்ளது தெரியவந்துள்ளது. கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சலில் மீன் விற்றமூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவமும், தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லை நோக்கிச்சென்றஅரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர், பெண் மற்றும் சிறுமி ஆகியோரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவமும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நடத்துநர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.