Government bus driver allegedly responded to woman passenger with indifference

கூடலூரை அடுத்த அய்யன்கொல்லியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்திற்காக நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து, பெண் நிறுத்தச் சொல்லி கை காட்டியும் நிறுத்தாமல்சென்றுள்ளது. பின்னர் அதே பேருந்து அய்யன்கொல்லியில் நின்றுகொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட பெண் அந்தப் பேருந்தின் ஓட்டுநரிடம் ஏன் பேருந்தை நிறுத்தவில்லை என்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் அலட்சியமாகப் பதில் கூறுகிறார்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோஎடுத்து வெளியிட்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில், “4 மணி நேரம் நிக்கிறோம், பஸ்ஸே வரல; கைய காட்டினாலும் நீங்களும் கண்டுக்காம பஸ்ஸ நிறுத்தாம போய்ட்டீங்க...” என்று அந்த பெண் கேட்க, “உன்ன கண்டுக்கிறதுக்கு இது என்ன உங்கப்பன் வீட்டு வண்டியா...” என்று அலட்சியமாக பதில் கூறுகிறார் ஓட்டுநர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனகூடலூர் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.