
திருச்சியில் இருந்து முக்கொம்பு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலையோரம் இருந்த உயரழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து முக்கொம்பு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கம்பரசம்பேட்டை என பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் இடது புறம் இருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது மோதியது. எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதிவிபத்து ஏற்படாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுநர் முற்பட்ட பொழுது அரசு பேருந்து நிலைதடுமாறி மின்கோபுரத்தில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த 5 பேர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரிய சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. காயத்துடன் மீட்கப்பட்டு அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
Follow Us