government bus conductor suspended in tanjore

மூதாட்டியிடம்தரக்குறைவாக நடந்து கொண்ட அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Advertisment

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டு வரும்நகரப் பேருந்துகளில் மகளிர்இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால்,நடத்துநர்களும் ஓட்டுநர்களும்பெண்களிடம் மரியாதைக் குறைவாகநடந்து கொண்ட சம்பவங்கள் நடைபெற்றநிலையில், போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டசுற்றறிக்கையில் நடத்துநர்களும்ஓட்டுநர்களும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் தெரிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன.

Advertisment

இந்நிலையில், தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34ஏ என்ற அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் அடிக்கடி பயணித்த நிலையில், "ஓசின்னா சும்மா சும்மா பஸ்ல வருவியா" என நடத்துநர் தரக்குறைவாகப் பேசினார். அதற்கு மூதாட்டி "என்ன தம்பி இப்படி தரக்குறைவா பேசுறீங்க. சாமிக்கு மாலை போட்டு இருக்கீங்க. இப்படி பேசுறீங்க" எனத்தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மூதாட்டியிடம் அரசுப் பேருந்து நடத்துநர் சண்டையிடும் வீடியோ காட்சிசமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தநிலையில், இச்சம்பவத்திற்கு காரணமான அரசுப் பேருந்து நடத்துநர் ரமேஷ் குமார் தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுஉள்ளார்.