/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a71123.jpg)
அரசு பேருந்து, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி 27 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பொய்கை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது டிராக்டர் மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநர் உட்பட 5 பேர் காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விபத்து ஏற்பட்டுள்ள அரசு பேருந்தையும் டிராக்டரையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் அவ்வழியாக வரக்கூடிய வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)