Advertisment

தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

A government bus caught fire

Advertisment

கேரளாவில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து என்ஜினில் இருந்துதிடீரென புகை வெளிப்பட்ட நிலையில், எரியத்தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

மொத்தமாக 54 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என அனைவரும் கீழே இறங்கி நிலையில், தீயானது பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்ததீயணைப்புத் துறையினர் பெருமுயற்சி எடுத்துதீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்தின்அனைத்து பகுதிகளும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம்பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe