car

Advertisment

car

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த ஈகோ வாகனமும் அதிகாலை 4.30 மணியளவில் கீழ செல்வனூர் காவல் நிலையம் அருகிலேயே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழ்க்கரை பாரதிநகரை சேர்ந்த 3 வாலிபர்கள் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.

இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக வெடி வாங்குவதற்க்கு சிவகாசி சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதில் பாரதிநகர் அருண் (வயது 20), உமய பாலா (18), விஜயராஜ் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

மேலும் நவீன் (19), உமயகணேஷ் (20), புவனேஸ்வரன் (16), கிருஷ்ணகுமார் (23), கமல்ராஜ் (28), வேல் முனியாண்டி (36), மோகன் (30) மற்றும் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணன் (55) ஆகியோர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

பலியான 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரே கிராமத்தில் மூன்று வாலிபர்கள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துபற்றி கீழசெல்வனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.