Advertisment

டயர் வெடித்து எரிந்து தீக்கிரையான அரசுப் பேருந்து

 A government bus burst into flames after a tire burst

Advertisment

சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாகமயிலாடுதுறைக்குச் செல்லும்கும்பகோணம் கோட்ட அரசுப் பேருந்து, சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு இரவு 9 மணி 15 நிமிடத்திற்கு வந்தது. பேருந்தில் 10 பயணிகள் இருந்துள்ளனர். அப்போது பின்பக்க டயர் அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. டயர் வெடித்ததும் பேருந்து முழுவதும் மளமளவென தீப்பரவி பேருந்து முழுவதும் எரியத்தொடங்கியது. எரிந்து கொண்டிருக்கும் பேருந்துக்கு அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற பேருந்துகள் உடனடியாக அகற்றப்பட்டன.

இதனையொட்டி சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதில்யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

fire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe