/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3430.jpg)
நாகை மாவட்டம், திருப்பூண்டியை அடுத்துள்ள மேலப்பிடாகை கடைத்தெரு அருகாமையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து. அப்போது எதிர் திசையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, அருகிலுள்ள மரத்தின் மீது மோதி முகப்பு முழுவதுமாக நொறுங்கியது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன், பேருந்தில் பயணித்த அமீர், சுப்பையன் மற்றும் தனியார் பேருந்தின் ஓட்டுநர் கலையரசன் ஆகிய நால்வரும் காயமடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)