Advertisment

அன்னூர் அருகே அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை 60 பயணிகளுடன் சென்றஅரசுப்பேருந்து புளியம்பட்டி அன்னூர் சாலையில் வந்துகொண்டிருந்தது. பேருந்தினை ஓட்டுநர் செந்தில் என்பவர் ஓட்டிவந்தார். அரசுப்பேருந்து அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது சாலையின் எதிரே ஒன்னகரசம்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் பேருந்தில் மோதுவதுபோல் வந்துள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர் செந்தில் குமார் பேருந்தை இருசக்கர வாகனத்தில் மோதமல் இருக்க பேருந்தை திருப்பியபோது சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

government bus Accident  near Annur; More than 15 injured

இந்த விபத்தில்பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் படுகாயமடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

government bus Accident  near Annur; More than 15 injured

மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கருப்பசாமியும், பேருந்துமோதியதில் காயம்பட்டுஉயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு வழக்குபதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Bikers bus accident kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe