புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமாக உள்ள மாஹே தொகுதிக்கு நிதி ஒதுக்கீட்டில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், அத்தொகுதி எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அப்பகுதி மக்களை அரசு புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் மாஹே பொறுப்பாளர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

Advertisment

 Government boycotts Mahe constituent in Puducherry.. people protest

இந்நிலையில் மாஹே பொதுப்பணித்துறையில் பணிமுடிந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை ரூ.2.20 கோடி கோருதல்,கடலோர வளைவு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஹே பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புதுச்சேரியில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 Government boycotts Mahe constituent in Puducherry.. people protest

Advertisment

பாலாஜி தியேட்டர் அருகே திரண்ட மாஹே பகுதி மக்கள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி வழியாக மிஷன் வீதியை சென்றடைந்தனர். அங்கு ஜென்மராக்கினி கோயில் எதிரே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கேரள மாநில செயலவை உறுப்பினர் சுரேந்தரன், மாஹே பகுதி செயலாளர் சுனில்குமார், பள்ளூர் பகுதி செயலாளர் சுரேந்திரன், தலச்சேரி செயலாளர் பவித்ரன், வடக்கன் ஜனார்த்தனன், புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது மாஹே பிராந்தியத்தை புறக்கணித்தால் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும்எச்சரித்தனர்.