
திருவண்ணாமலையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திடீரென சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த அரசு கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தாலும் தேர்வு மதிப்பெண்கள் தங்களுக்கு வரவில்லை என்றும் குற்றம்சாட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டமும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உள்ளாக ஆர்ப்பாட்டமும் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் கிடைக்காததால் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் கல்லூரிக்கு முன்பு சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு கட்டணம் தங்களுக்கு இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள்செங்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)