புதிய கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதிதாக தொடங்கப்பட்ட 10 அரசு கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை நடத்த முயற்சிக்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும்' என வலியறுத்தியுள்ளார்.