Advertisment

மருத்துவக் கல்லுரி டீன்கள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி டீன்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன், செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

governement medical colleges deens transferred tn govt order

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முத்துக்கிருஷ்ணன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன், சிறப்பு அதிகாரியாக பேராசிரியர் முத்துச்செல்வன் நியமனம். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன், சிறப்பு அதிகாரியாக பேராசிரியை ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகை அரசு மருத்துவக்கல்லூரி டீன், சிறப்பு அதிகாரியாக பேராசிரியர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

government transferred deens medical colleges tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe