Advertisment

கொலை முயற்சி வழக்கு; நால்வர் மீது குண்டாஸ்

Goondas for four in trichy

திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் முகமது தவுபிக்ராஜா(வயது 23). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கடந்த மாதம் பிரச்சனை ஏற்பட்டது.

Advertisment

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இரவில் அவர் அந்த பகுதியில் அமர்ந்து இருந்தபோது ஒரு கும்பல் முகமது தவுபிக்ராஜாவை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Advertisment

இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரியமங்கலம் அம்மாகுளம் தெருவைச் சேர்ந்த பாதுஷா (23), அரியமங்கலம் மலையடிவாரம் காந்திஜி தெருவைச் சேர்ந்த பாலாஜி (20), அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (20) ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் சிறையில் உள்ளவர்களிடம் அதற்கான நகலைக் கொடுத்துள்ளனர்.

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe