Advertisment

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை; குண்டர் சட்ட கிரிமினல் மீது பாய்ந்த போக்சோ ! 

Goondas criminal who arrested in pocso

ஈரோடு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் என்கிற பாபு(29). கூலி தொழிலாளியான இந்த நபர், ஈரோட்டைச் சேர்ந்த அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியதையடுத்து அவரது பெற்றோர் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

Advertisment

அதன்பேரில் போலீசார், போக்சோ, கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் பாபு மீது ஏற்கனவே ஈரோடு டவுன், மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே சென்ற 2020ம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த இவர், இப்போது பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

Erode POCSO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe