Advertisment

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி; ஆட்சியரின் அதிரடி உத்தரவு

Goondas Act was imposed on the laborer arrested in the POCSO case

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மலையடி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வடிவேல்(44). இவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisment

இதையடுத்து வடிவேலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு எஸ்.பி. ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் போக்சோ வழக்கில் கைதான வடிவேலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடிவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கோவை சிறை துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Advertisment
arrested POCSO police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe