மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்த குண்டாஸ்!

fg

கோவையில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த 17 வயது மாணவி கடந்த மாதம் 11ஆம் தேதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, மாணவியின் செல்ஃபோன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ததில், அவருக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஆசிரியரின் பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனின் பெயரை வழக்கில் சேர்த்த காவல்துறையினர், அவரைகைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.

kundas mithun sakkaravarthi
இதையும் படியுங்கள்
Subscribe