/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_37.jpg)
தர்மபுரி அருகே, பிளஸ்2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி ஒருவர், கடந்த நவ. 17ம் தேதி, பள்ளிக்கு ஒற்றையடி பாதையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் மாணவியை வழிமறித்து அருகில் உள்ள புதர் பகுதிக்கு தூக்கிச்சென்றுபாலியல் வன்கொடுமை செய்தனர். ஒரு கட்டத்தில்மாணவி மயக்கம் அடைந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்தபோது அரைநிர்வாணமாக கிடந்த மாணவியின்முனகல் சத்தம் கேட்டு, அந்த வழியாக வந்த சிலர்அவரை மீட்டுதர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், மாணவியை வன்கொடுமை செய்த இண்டூரைச் சேர்ந்த சேகர் மகன் சவுகத் (20), அவருடைய கூட்டாளி மனோகரன் மகன் குமரேசன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சவுகத், குமரேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை எஸ்பி கலைச்செல்வன்மாவட்டஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் சாந்திஇருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, சவுகத், குமரசேன் ஆகியோரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளஅவர்களிடம் கைது ஆணையின்நகல் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)