Goondas act on cannabis seller

திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு அருகில் கடந்த 15ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக ரமேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisment

மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரமேஷ் மீது வழிபறி சம்பந்தமாக 7 வழக்கு, கஞ்சா விற்பனை தொடர்பாக 8 வழக்கு, திருட்டு அடிதடி உள்ளிட்டவை சம்பந்தமாக 20 வழக்கு என வெவ்வேறு காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து ரமேஷ் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவரிடம் குண்டர் சட்டம் ஆணை சார்பு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment