Advertisment

ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது குண்டர் சட்டம்! 

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவசனூர் கோட்டை - திருக்கோவிலூர் சாலையில் உள்ளது எறையூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட் பால்ராஜ். இவரை முன் விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான் மனோஜ், ஏ.அலெக்சாண்டர், ஜஸ்டின் பவுல்ராஜ், ரோஸ்லியோ பிராங்கிளின், அலெக்சாண்டர், அந்தோணி ரேமண்ட், ரூபன் லூர்து ராஜ் ஆகிய 7 பேரும் ஒன்று சேர்ந்து வின்சென்ட் பால்ராஜை தடியால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதன் காரணமாக இவர்கள் ஏழு பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேற்படி 7 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளின் ஆட்சியருக்கு பரிந்துரை வழங்கினர். அதன்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

goondas act kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe