பணமாத்தான் கொடுக்கணும்னு இல்ல.. க்யூ.ஆர்.கோடினை ஸ்கேன் பண்ணிட்டு போங்க... 

Google pay and phone pay in madurai marriage

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி - ஜெகதிஸ்வரன் ஆகியோரது மகள் சிவசங்கரிக்கும், மதுரை பாலரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - சாந்தி ஆகியோரது மகன் சரவணன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் மதுரை கான்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிறன்று (17.01.2021) நடைபெற்றது. இதில் மிக நவீனமாக கூகுள் பே, ஃபோன் பே போன்ற செயலிகளின் மூலமாக மொய்ப்பணம் வசூல் செய்யப்பட்டது.

இந்தத் திருமண நிகழ்வில், மொய் கொடுக்கின்ற இடத்தில் google pay மற்றும் Phone pe ஆகியவற்றின் க்யூ.ஆர்.கோட் வைக்கப்பட்டு வசூல் நடைபெற்றது. புதுமையான இந்த முறையின் மூலம் திருமணத்திற்கு வருகின்ற நண்பர்கள், உறவினர்கள் ஆன்லைனில் தங்களது மொய்ப் பணத்தை விரைவாகவும், கூட்ட நெரிசலின்றியும் செலுத்தினர்.

டிஜிட்டல் இந்தியாவின் நவீன வளர்ச்சி திருமண நிகழ்வுகளில் மொய் வசூலைக் கூட விட்டுவைக்கவில்லை என்பது வியப்புக்குரியதுதான். இனிமேல் திருமணத்திற்கு செல்பவர்கள் மொய் கொடுக்காமல் வர முடியாது..!

madurai
இதையும் படியுங்கள்
Subscribe