Advertisment

திருச்சி விமான நிலையத்தில் மூடப்பட்ட பண்டம் சேவை முனையம்

Goods service terminal closed at Trichy airport

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் நூறுக்கணக்கான மக்கள் விமானச் சேவையை பயன்படுத்துகின்றனர். அதேபோல், விமான நிலையத்தில் செயல்படும் பண்டம் முனையம் மூலம், டன் கணக்கான பண்டங்கள் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Advertisment

குறிப்பாக திருச்சி மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களில் இருந்துகாய்கறிகள், பழ வகைகள் மற்றும் பால் பொருட்கள் என தினமும், குறைந்தது 20 முதல் 25 டன் அளவிற்கான பண்டங்கள் கையாளப்படுகின்றன. இதன்மூலம் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை வருமானமும் வருகிறது.

Advertisment

இந்நிலையில் தற்போது நிர்வாகம் காரணமாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாகவும் விமான நிலையத்திற்குப் பண்டங்களை கொண்டு வரவேண்டாம் என ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், நேற்று முதல் திருச்சி விமான நிலையத்தில் பண்டம் முனையச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பண்டம் சேவை முனையம் மீண்டும் எப்போது துவங்கும் என்பதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

airport trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe