/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1254.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் நகரம் முழுக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் குறித்து நல்ல தீர்ப்பு வழங்கிட வேண்டுமென கலைஞர், எம்ஜிஆர், அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் சார்பில் அதனுடைய நிறுவனரும் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளருமான வண்டிப்பாளையம் ராஜா சுவரொட்டி ஒட்டி உள்ளார்.
அந்த சுவரொட்டியில், ‘தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய வாக்குப்படி, கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வாக்கியங்களுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், மக்களின் இதயங்களில் தாயாகவும் விளங்கிய செல்வி ஜெயலலிதா அம்மையாரின் மர்ம மரணத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.
அம்மாவின் வேதா இல்லத்தில் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி என்ன நடந்தது. எதற்காக அவர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அம்மா ஜெயலலிதாவின் பூத உடலை அவருடைய குல வழக்கபடி இறுதி மரியாதை செய்யாமல், அவசர அவசரமாக அடக்கம் செய்தது ஏன்.?அம்மா இறந்த பின் கொடநாடு எஸ்டேட்டில் மர்ம கொலை நடந்தது கொலைசெய்தவர் யார்.?’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பும் வாசகங்கள் அந்த சுவரொட்டியில் அடங்கியுள்ளது.
அந்த சுவரொட்டியில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., இன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆ.ஜெ.மணிக்கண்ணன் உள்ளிட்ட படங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த சுவரொட்டி நகரம் முழுக்க ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)