Advertisment

ஏழ்மையான வீரர்களுக்கு பண உதவி செய்து போட்டிக்கு வழியனுப்பிய நல்ல உள்ளங்கள்!

Good souls who donated money to poor players and sent them to the tournament

Advertisment

திருச்சி தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்க திருச்சியைச் சேர்ந்த அருண், சரவண குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வீரர்கள், சாதனை படைக்க பயணச்செலவுக்கான நிதியுதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்பட பல நல்ல உள்ளங்கள் உதவி செய்தார்கள். பூட்டான் நாட்டில் நடக்கும் இளைஞர்களுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்ஆகஸ்ட் 7, 8தேதிகளில் நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றிபெற்று நாடு திரும்ப அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர். மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்புச் செயலாளர் கி. சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே. ராஜா, இளைஞர் அணி மணிவேல் அண்ணாதுரை ஆகியோர் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

District Collector Games Bhutan trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe