Skip to main content

இது ஒரு நல்ல முடிவு - விஜய் சேதுபதியின் விலகலுக்கு சமுத்திரக்கனி ஆதரவு!

jjhhg

 

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. 

 

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த முரளிதரன் தன்னுடைய பயோபிக்கில் நடிக்க வேண்டாம், விலகிக் கொள்ளுங்கள் என்று  கடிதம் வாயிலாக விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை அடுத்து அந்த படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார். இந்நிலையில் அவரின் இந்த முடிவு நல்ல முடிவு என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்