சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பொன்விழா ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்கள் தலைமையில், அனைத்து குருக்கள் இணைந்து சிறப்பு திருப்பலி நடத்தி பின்னர் தேர் பவனியைத்துவக்கி வைத்தனர். செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற திருத்தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Advertisment