Advertisment

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வாள்சண்டை விளையாட்டில் தங்கம் வென்ற தமிழன்..!

sports

ஆஸ்திரேலியா நாட்டில் கென்பீரா என்ற இடத்தில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட காமன்வெல்த் போட்டியில் வாள் சண்டை போட்டியில் சேபர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஜிஷோநிதி தங்கம் வென்று நம்நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

Advertisment

sports

மொத்தம் 14 நாடுகள் பங்குகேற்ற வாள் சண்டை போட்டியில் குழு அளவில்லான போட்டியில் தங்கம் வென்றுள்ளார் ஜிஷோநிதி, இவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மூவாற்றுமுகம் ஊரை சேர்ந்தவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஜிஷோநிதி அப்பா குமரேசன் சிறுதொழில் செய்து வருகிறார். தாயார் பத்மாவதி, பள்ளி பருவத்தில் இருந்தே வாள் சண்டையை பழகிவந்த ஜிஷோநிதி பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்து வாள் சண்டை போட்டிக்கு பயிற்சி பொற்றுவந்த இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த காமன் வெல்த் வாள் சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். நாடு திரும்பிய ஜிஷோநிதியை அம்மாவட்ட மக்கள் சார்பில் மகிழ்ச்சி பொங்க சிவப்பு கம்பல வரவேற்பு அளித்தனர். நம் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே ஒரே லட்சியம் என்று கூறினார்.

Advertisment

indiansports sports
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe