/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1788.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள எரியோடு பாளையம், வேடசந்தூர், அய்யலூர் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் திமுகவினர், வாக்காளர்களுக்கு தங்ககாசு வழங்கியதாக அதிமுகவினர் போலீசில் புகார் கூறியுள்ளனர். இருந்தபோதிலும், காவல்துறையினர் பெரிதாக கண்டுகொள்ளாததால், திமுகவினர் மறைமுகமாக வாக்காளர்களுக்கு தங்கக் காசை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)