தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சில இடங்களில் ஓட்டுக்கு காசு, பரிசு பொருட்டுகள் வழங்குவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதன்படி அதிமுகதரப்பில் தங்கக்காசு வழங்கிவதற்கானடோக்கன்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. தங்கக்காசு டோக்கனை போட்டுவிட்டு ஓடிய அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். ஏற்கனவே சோழவந்தான் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்த டோக்கன்களை மக்கள் வாங்க மறுத்த நிலையில் வாடிப்பட்டியிலும் மக்கள் டோக்கன் வாங்க மறுத்ததால் அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர். டோக்கன்களை பெற்றவர்களும் அதை கிழித்து சாலையில் எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் தங்கக்காசு, பட்டுசேலை, மூக்குத்தி வழங்குவதாக கூறி அதிமுகவினர் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.
இதுபோன்று பரிசுப்பொருள் டோக்கன் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.