Gold smuggling: Youth caught with customs officials

திருச்சி விமானநிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வரும் சிலர் தங்கத்தைக் கடத்திவருவது தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கிறது. துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன், தனது உடலில் மறைத்துவைத்து கடத்திவந்த 40.5 லட்சம் மதிப்பிலான 840 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் (19.09.2021) இரவு சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்துவந்த 785 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் 36.9 இலட்சம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் திருச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.