Advertisment

விமானத்தில் தங்கம் கடத்தல் - 41 சுங்க அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம். அடுத்த ஒரு நாட்களுக்குள் பணி சேர சொல்லி வாய் மொழி உத்தரவு என திருச்சி விமாநிலையம் ஏகப்பட்ட பரபரப்பாக இருக்கிறது.. காரணம் என்ன என்று விசாரித்ததில்..

Advertisment

திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு தினமும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளில் திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

Advertisment

கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது. இந்த குற்றசாட்டிற்கு பிறகு ஒரு சில பயணிகள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டும் வந்தது.

ஆனால் பயணிகள் சிலர் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் அடிப்படையில் கடந்த மாதம் 5-ந் தேதி திருச்சி விமானநிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி விசாரணையில் இதில் தொடர்புடைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்டேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். இவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது வேலியே பயிரை மேய்ந்த கதை போல் ஆகிவிட்டது. அதிகாரிகளின் செயலால் திருச்சி விமான நிலையத்தின் பெயர் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க தொடங்கினார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சி.பி.ஐ. நடத்திய சோதனை எதிரொலியாக திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார். மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் வரும் 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த்யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ்குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.

இப்படி திருச்சி விமாநிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம் என்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் விமானநிலைய அதிகாரிகள்.

trichy trichy airport
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe